தமிழகத்தில் திருச்சி மத்திய சிறை முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டவர் மற்றும் இலங்கை அகதிகள் அடைத்து வைத்திருக்கும் பிரிவு மற்றும் சென்னை திருப்பூர் உள்ளிட்ட 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சேர்ந்த டிஐஜி, எஸ்.பி, தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 57 மொபைல் போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பெண் டிரைவ், 1 ஹார்டிஸ்க், 2 இரண்டு லேப்டாப், 8 மோடம்கள், இலங்கை பாஸ்போர்ட், மற்றும் தங்க நகைகள், ரூ. 31 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை பரிமுதல் செய்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு கேரள மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் பகுதியில் மீனவர் படகை கடற்படை அதிகாரிகள் சோதனையிட்டதில் ரூ.350 கோடி மதிப்புள்ள போதை பொருள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பிடிப்பட்டன. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்கு பதிவு செய்து, பிரபல போதை கடத்தல் மன்னன் ஹாஜிப் சலப் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
இதில் 8 வது குற்றவாளியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இலங்கையைச் சேர்ந்த, குணசேகரன் என்கிற புஸ்பராஜ் என்கிற, பூகுட்டி கண்ணா, ஹாஜி சலீம் உள்ளிட்ட தலைமையிலான பேதை கடத்தல் கும்பல் தான் இதன் பின்னணியில் இருப்பது என தெரியவந்தது. இலங்கயில் நடந்த, சம்பவத்திற்கு பழிவாங்கும் விதத்தில் விடுதலைபுலிகள் அமைப்பு மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட தயாராகி வருவதாகவும், இதற்காக போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை வாங்கி குவிப்பதும் தெரியவந்தது.
பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு நவீன ரக ஆயுதங்களும், போதைப் பொருட்களும் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜுலை 8ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகள், ஆயுத கடத்தல் மற்றும் போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட 10 வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு போதை கடத்தல் கும்பல் மற்றும் ஆயுத கடத்தில் வழக்குகளில் சிக்கி கைதான குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தபடி இந்த சதிச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ டிஐஜி கொள்ளம் என்.ஐ.ஏ எஸ்பி தர்மராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே திருச்சி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆயுத கடத்தலில் வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் பெயரில் விடுதலை புலிகள் அமைப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் படி தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரகசிய கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அனுமதியோடு 100 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பை பெற்று தமிழக காவல் துறைக்கு எவ்வித அறிவிப்பும் தராமல் அதிரடியாக சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனையில் வெளிநாட்டு கைதிகளிடமிருந்து 31 லட்சம் ரொக்கம் பணம், செல்போன், பெண் டிரைவ் உள்ளிட்டவைகள் பரிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஒரு செல்போனில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் சிறைக்குள் இருந்தபடியே செல்போனில் தொடர்ச்சியாக பேசி திட்டம் தீட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 9 குழுக்களாக போதை கடத்தல் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வருவதும் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையோ, கண்காணிப்போ இல்லாமல் தமிழ்நாடு காவல்துறை கோட்டைவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்போன்கள் மற்றும் பெண் டிரைவ் லேப்டாப், ஹார்டிஸ்க் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த கும்பலை ஒட்டுமொத்தமாக கைது செய்ய மத்திய உள்துறை உதவியுடன் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையில் போது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த மற்றொரு சம்பவம், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள, வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட பிரிவில், 190 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பல முக்கிய வழக்குகளில் தொடர்புடைய இந்த குற்றவாளிகளை கண்காணிக்க ஒரே ஒரு பெண் ஏட்டு விஜயலட்சுமி மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தார். மிக முக்கிய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க குறைந்த பட்சம் உதவி கமிஷ்னர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு வழங்பப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோர் இந்த முகாமில் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் ஒருமுறை கூட இந்த முகாமிற்கு சென்று ஆய்வே செய்யாதது தெரியவந்துள்ளது. இது குறித்த ரகசிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சருக்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் தமிழ்நாடு காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் டிஜிபி, உளவுத்துறை கூடுதல் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் மத்திய உள்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







