#NewYear2025 | உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது!

உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது. 2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இரவு…

#NewYear2025 | Kiribati Island becomes the first country in the world to celebrate the New Year!

உலகில் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் 2025 புத்தாண்டு பிறந்தது.

2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இரவு 12 மணிக்கே புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது.

இதையும் படியுங்கள் : #Vidaamuyarchi டிரெய்லர் எப்போது? வெளியான தகவல்!

அந்த வகையில், கிரிபாட்டி [Kiritimati] தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிபாட்டி தீவில் 2025 ஆம் வருடம் பிறந்துள்ளது. இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது.

இந்த தீவில் 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியான கொண்டாடி வருகின்றனர். கிரிபாட்டி தீவு கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய பசிபிக் பெருங்கடல் பவளப்பாறை மற்றும் கிரிபாட்டி குடியரசின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.