முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: போக்குவரத்து காவல்துறையினர் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பெருமாள் கோவில் போக்குவரத்து காவல்துறை:

சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி முன்னிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கரிவலம் வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த கரிவலம் வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கையெழுத்திட்டனர். இந்த முயற்சியை முன்னெடுத்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் கலையரசி மற்றும் பள்ளி முதல்வர் ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்

மங்களாபுரம், எவரெஸ்ட் மேல்நிலைப் பள்ளி:

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே மங்களாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும், எவரெஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் நியூஸ்-7 தமிழ் முன்னெடுக்கும் பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.மேலும், நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பாலின சமத்துவம் குறித்து மாணவ – மாணவிகள் அறிந்து கொள்ள ஒரு நல் வாய்ப்பாக உள்ளதாக ஆசிரியர் பெருமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

இபிஎஸ், ஜெயலலிதாவின் தொண்டர் இல்லையென்பதை உறுதிப்படுத்தி வருகிறார் -டிடிவி.தினகரன்

G SaravanaKumar

கிரிக்கெட் மட்டையால் கணவரைத் தாக்கிய மனைவி!

EZHILARASAN D