நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக கூடுதல் ஹெலிகாப்டர்கள் நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.







