முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.  முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கனவே…

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கார்களில் 3 கண்காணிப்பு கேமரக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வெளியே செல்லும் போது, பாதுகாப்பு வீரர்கள் வெளியில் இருந்தவாறே கார்களில் நிற்கும் வகையில் இந்த காரக்ள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மற்ற வாகனங்களில் இருந்து தனித்து செல்வதற்காக இந்த கார்கள் மாற்றப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கார்களின் புத்தாண்டு தினமான இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து தனது தயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரம் சென்றார். அப்போது இந்த புதிய கார்களின் கான்வாய் மூலம் அவர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.