‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரல்!

‘டெவில்’ திரைப்படத்தின்  புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்’. இந்த திரைப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

‘டெவில்’ திரைப்படத்தின்  புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்’. இந்த திரைப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படியுங்கள் ; “ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை!” – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம்..!

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ‘டெவில்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.  அண்மையில் ‘டெவில் ‘ திரைப்படத்தின் புதிய புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், ‘டெவில் ‘ திரைப்படத்தில் இருந்து கடவுளுக்கு கோரிக்கை என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் வரிகளை மிஷ்கின் எழுதியுள்ளார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.