முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல் வெளியீடு

அரசு சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

பொதுப்பணித்துறையின் மூலம் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்துறை, நீதிமன்றம், போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான தேவையான அலுவலகங்கள் கட்டித் தரப்படுகிறது. நீர்வளத்துறை மூலம் புதிதாக அணைக்கட்டுக்கள் கட்டுதல், அணைகள் ஏரிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் 2021-2022ம் ஆண்டுக்கான கட்டுமான பொருட்களின் புதிய விலைப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு மெட்ரிக் டன் ஸ்டீல் ரூ.51,750 ஆகவும், ஒரு மெட்ரிக் டன் சிமென்ட் ரூ.5,960 ஆகவும், 1,000 செங்கல் விலை ரூ.7,695 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமான பணியில் ஈடுபடும் கொத்தனாருக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.861, சித்தாள் ரூ.718 ஆக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

‘நல்ல சிகிச்சை கிடைத்தால் பிழைப்பேன்’: உதவி கேட்ட நடிகர் கொரோனாவுக்கு பலி!

Halley karthi

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Gayathri Venkatesan

கருணாநிதி நினைவு நாள்: எளிமையாக கடைபிடிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Gayathri Venkatesan