சூர்யாவின் #Kanguva ரீலீஸ்… புதிய தேதியை வெளியிட்ட படக்குழு!

நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ…

new release date , movie ,Kanguva, actor Surya

நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.

‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், திரைப்படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் ‘கங்குவா’ ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.