GOAT படத்தின் புதிய போஸ்டர்… குஷியில் விஜய் ரசிகர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில்,  GOAT படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில்,  GOAT படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது.  Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.  இந்நிலையில் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா, பேங்காக் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்  லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த நிலையில்,  பொங்கலை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  நடிகர்கள்பிரபுதேவா,  பிரசாந்த்,  அஜ்மல் ஆகியோர் சிரித்த முகத்துடன் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த போஸ்டர் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/Ags_production/status/1746767055968469251

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.