தவறவிட்ட ஃபேஸ்டைம் அழைப்புகள், வாய்ஸ் மெயில் மற்றும் வீடியோமெயில்களை ஆப்பிள் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.
உலகளவில் சிறந்த OS என்று அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் iOS, புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ‘iOS 17’ வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த புதிய iOS 17, iOS 16 போல மிகப்பெரிய அப்டேட்டாக, இல்லாமல் சில முக்கியமான வசதிகளை மட்டும் உள்ளடக்கியதாகும். ஆப்பிள் பேஸ்டைமில் புதிதாக குரல் அஞ்சலுக்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி ஆப் உள்ளே புதிய தேடும் வசதி மற்றும் ஏற்கனவே இருக்கும் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஐபோனை ’மெகா சேஃப் ஸ்டாண்ட்’ மீது வைத்தால், தானாகவே ஐபோன் UI ஸ்க்ரீன்-க்கு மாறிவிடும்.
மற்றொரு புதுப்பிக்கப்பட்ட அம்சம் ‘செக்-இன்’ வசதி ஆகும். இது அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் வெளியில் சென்றால் வீடு திரும்பும் வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என கண்காணிப்பதோடு, வீட்டிருக்கு நீங்கள் வந்துவிட்ட செய்தியையும் தெரிவிக்கும்.
ஆப்பிள் போனில் தானியங்கு திருத்தம் வசதி புதிய iOS இல் அறிமுகமாகிறது. இதன் மூலம் கீபோர்டுகள் ஒரு புதிய மொழி மாதிரியுடன், பயனருக்கு எளிதாக குறுஞ்செய்திகளை திருத்தம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏர்டிராப் மற்றும் நேம்டிராப் மூலம் பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள கோப்புகளை, பாடல்களை மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
ஆப்பிள் பேஸ்டைமில் இப்போது ஆடியோ மற்றும் வீடியோ செய்திகளை பகிரலாம். எனவே பயனர்கள் ஒருவரை அழைக்கும் போது அவர்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை என்றால், அவர்கள் பின்னர் பெறுவது போல செய்தியைப் பகிரலாம்.
இதற்கிடையில், ஆப்பிள் சிரியின் பயனர்கள் உச்சரிக்கும் வார்த்தையில் ‘ஹே சிரி’-இலிருந்து ’ஹே’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







