கனட நாட்டில் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் தெரு

கனடாவில் உள்ள மார்கம் நகரில் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு, அவர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   ரோஜா படத்தின் மூலம் திரை இசை உலகில் நுழைந்த ஏ.ஆர்.ரகுமான் இந்திய இசை…

கனடாவில் உள்ள மார்கம் நகரில் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு, அவர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

ரோஜா படத்தின் மூலம் திரை இசை உலகில் நுழைந்த ஏ.ஆர்.ரகுமான் இந்திய இசை உலகில் தனி முத்திரையை பதித்துள்ளார். இசைதுறையில் பல்வேறு சாதனைகளையும் உறிய விருதுகளையும் பெற்றுள்ள அவர் இன்னும் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை வியக்கவைத்து வருகிறார்.

 

தென்னிந்திய மொழிகள், வடமொழிகளையும் தாண்டி ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஏ.ஆர்.ரகுமானின் இசை பரவி இருக்கிறது. இதனிடையே, அவர் தற்போது, பொன்னியின் செல்வன் பாகம் -1 படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில், கனடாவின் மார்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பெயரை அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான் கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் நிறை விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிட்டி ஆஃப் மார்க்கம் பகுதியில் உள்ள தெருவுக்கு தன் பெயரை சூட்டியதன் மூலம், தன் வாழ்நாளில் இதை நினைத்துப் பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் மார்க்கம் மேயர் ( ஃபிராங்க் ஸ்கார்பிட்டி ) மற்றும் ஆலோசகர்கள் , இந்திய துணைத் தூதரக ஜெனரல் ( அபூர்வா ஸ்ரீவஸ்தவா ) மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் தான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் என்னுடையவர் அல்ல. அதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணம். ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதியையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என தெரிவித்துள்ளார்.

 

அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் எனக்கு உத்வேகத்தை அளித்தவர்கள். மேலும் பலவற்றைச் செய்வதற்கும் உத்வேகமாக இருப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

 

சோர்வடையாமல், ஓய்வு பெறாமல் இன்னும் தான் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது. மேலும் நிறைய மக்களை இணைக்க வேண்டி உள்ளது என்று அறிக்கையில் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.