நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் – பிரதமர் மோடி இரங்கல்..!

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும்  நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த பேரிடர்களில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் அமைந்துள்ள இலாம் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவால் 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் சேதம் துயரத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடனும் அரசாங்கத்துடனும் நாங்கள் துணை நிற்கிறோம். நட்பு  மற்றும் அண்டை நாடாக தேவைப்படும் எந்தவொரு உதவியையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது”  தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.