நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று முந்தினம் காலை சுமார் 8:30 மணி அளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீடுகும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389-ஆக உயர்ந்துள்ளது; 517 வெளிநாட்டினர் உட்பட
மொத்தம் 977 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதுவரை 50 வெளிநாட்டினர்
வான்வழியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




