4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணித்த நேபாள விமானம் மாயம்

நேபாளத்திலிருந்து 4 இந்தியர்கள் உள்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணமால் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தாரா Air’s 9 NAET என்ற விமானம் நேபாள் தலைநகரான  பொக்ராவிலிருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9.55…

நேபாளத்திலிருந்து 4 இந்தியர்கள் உள்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணமால் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தாரா Air’s 9 NAET என்ற விமானம் நேபாள் தலைநகரான  பொக்ராவிலிருந்து ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன விமானத்தை தேடுவதற்காக நேபாள உள்துறை அமைச்சகம் இரண்டு தனியார் ஹெலிகாப்டர்களை முஸ்டாங் மற்றும் பொக்காராவிற்கு அனுப்பியுள்ளது. நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்த தயாராகி வருகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.  நேபாள  நாட்டு உள்ளூர் பயணிகள், விமான பணியாளர்கள்  என மொத்தம் 22 பேர் விமானத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.