நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இந்த ஆண்டும் கோலாகலமாக பசு திருவிழா கொண்டாடப்பட்டது
நேபாளம் நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் மறைந்த உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் பசுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேபாளத்தில் இந்து மத வழக்கத்தின்படி, கடந்த ஒரு ஆண்டுக்குள் தமது உறவினர்களை இழந்த குடும்பத்தினர், கட்டாயமாக இந்தத் திருவிழாவில் பங்குபெற வேண்டும்.
அப்போது அவர்கள் ஒரு பசுமாட்டை வீதிகளில் பிடித்துச் செல்வர். அவ்வகையில் ஒரு பசு மாடு கிடைக்கவில்லை என்றால், ஒரு சிறுவனை பசுமாடு போல அலங்கரித்து வீதிகளில் அழைத்துச் செல்வர். ஒவ்வொரு ஆண்டும், இறந்து போன தமது உறவினர்களுக்கு முக்தியும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திருவிழா இந்த ஆண்டும் காத்மாண்டுவில் உள்ள பவானி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.
தலேஜூ கோயிலுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாரம்பரிய முறையில் ஆடை அலங்காரத்துடன் வேடமணிந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். வேடமணிந்து வந்தவர்களுக்கு, பொதுமக்கள் காணிக்கையாக பணம் கொடுத்தனர்.
இசை வாத்தியங்கள் முழங்க, ஏராளமானோர் கோயிலில் வழிபட்டனர்.கொரோனா பேரிடருக்கு இடையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.










