அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு குறித்து இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு…

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்தது. இதை பயன்படுத்தி உடனடியாக 2.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.