நியூஸ்7தமிழ் நடத்திய NCL கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்றது கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி

நியூஸ்7தமிழ் நடத்திய முதல் கிரிக்கெட் லீக் போட்டியில் கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் சாய்ராம்…

நியூஸ்7தமிழ் நடத்திய முதல் கிரிக்கெட் லீக் போட்டியில் கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நியூஸ் 7 தமிழ் மற்றும் சாய்ராம் கல்லூரி இணைந்து நடத்தும் நியூஸ் 7 தமிழ் கிரிக்கெட் லீக்-யின் இறுதி போட்டி சாய்ராம் கல்லூரியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது

Imageஇறுதி போட்டிக்கு நுழைந்த மதுரை மண்டலத்தை சேர்ந்த சௌராஷ்ட்ரா கல்லூரி, திருச்சி மண்டலத்தை சேர்ந்த கே.எஸ்.ஆர் கல்லூரிக்கு இடையே இன்று மோதின.  முதலில் டாஸ் வென்ற மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சௌராஷ்டிர கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கே.எஸ்.ஆர் கல்லூரி  அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து அதிரடியாக வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸ்7தமிழ் நடத்திய முதல் கிரிக்கெட் லீக் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது  கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரி அணி.

நடந்து முடிந்த  போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி வீரர் ரவின் குமார்க்கு நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் 10,000 ரூபாய் பரிசு வழங்கினார். மேலும் இந்த கிரிக்கெட் தொடரின் ஆட்ட நாயகன் விருது பெற்ற, மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரி வீரர் சந்தோஷ்க்கு 20,000 ரூபாய் காசோலையை நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற கே எஸ் ஆர் தொழில்நுட்ப கல்லூரி அணியிக்கு, வெற்றி கோப்பையும் ஒரு லட்ச ரூபாய் காசோலையினை நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் மற்றும் ரெமோ இன்டர்நேஷனல் காலேஜ் டாக்டர் ரித்திக் பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரி அணிக்கு  50 ஆயிரம் ரூபாய் காசோலையை  நியூஸ்7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் மற்றும் சாய்ராம் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாறன் ஆகியோர் வழங்கினர். மேலும் சிறப்பு விருதினர்களுக்கு நியூஸ்7தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நினைவுப் பரிசு வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.