NCL 2023 : பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரியை வீழ்த்தி கோவை JCT பொறியியல் கல்லூரி அபார வெற்றி

பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரிக்கு எதிரான ஆட்டத்தில், கோவை JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023…

பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரிக்கு எதிரான ஆட்டத்தில், கோவை JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், பொள்ளாச்சி PA பொறியியல் கல்லூரி அணியுடன் கோவை JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி மோதியது.

இதையும் படியுங்கள் : NCL 2023 : கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியை பந்தாடியது ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி

இதில் டாஸ் வென்ற JCT கல்லூரி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பொள்ளாச்சி PA கல்லூரி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் 20 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். JCT கல்லூரியை பொறுத்தவரை கோபி, டெல்பின், ஶ்ரீநாத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை JCT கல்லூரி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மற்றொரு புறம் நிதானமாக விளையாடிய டெல்பின், கணபதி ஜோடி கடைசி வரை நின்று அதிரடி காட்டியது. இறுதியாக 19.2 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்த JCT கல்லூரி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், ஆட்டநாயகனாக JCT கல்லூரி அணியின் டெல்பின் தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.