சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பூனை ‘இந்தியாவின் தேசிய ஸ்பூன்’ என அறிவிக்க நெட்டிசன்கள் ஆசை

இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் சமையலறையில் ஸ்டீல் ஸ்பூனை பார்க்க முடிவதால், அதனை இந்தியாவின் தேசிய ஸ்பூன் என அறிவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.   இந்தியாவின் உணவு முறைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது.…

இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் சமையலறையில் ஸ்டீல் ஸ்பூனை பார்க்க முடிவதால், அதனை இந்தியாவின் தேசிய ஸ்பூன் என அறிவிக்க வேண்டும் என நெட்டிசன்கள் பகிர்ந்துள்ளனர்.

 

இந்தியாவின் உணவு முறைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்தியர்கள் உணவுக்காக பயன்படுத்தும் சமையலறை பொருட்களும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வித்தியாசம் பெற்றது. ஆனால், எல்லா மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஸ்டில் ஸ்பூன் காணப்படுகிறது.

 

இந்த ஸ்டில் ஸ்பூன் தற்போது நெட்டிசன்களின் பார்வையில் பட்டுள்ளது. சமூக வலைத்தள பக்கத்தில் ஸ்டீல் ஸ்பூன் படத்தை பகிர்ந்து, இவை இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் காணப்படுவதால் இந்தியாவின் தேசிய ஸ்பூன் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இணையவாசிகள் வைத்துள்ளனர்.

ஒவ்வொருவரின் சமையலறையிலும் இந்த ஸ்பூனை காணமுடிவதாகவும், அதில் வடிவமைக்கப்பட்டுள்ள டிசைன்கள் ஒன்று போல இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில நேரங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் நெட்டிசன்கள் இதனை வைரலாக்க தொடங்கியுள்ளனர். ஸ்டீல் ஸ்பூன் வீடுகளில் பொதுவானதாக காணப்படுவதாகவும், இவை இந்திய சமையலறையின் தனித்துவம் மிக்க சாதனம் என்றும் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.