தமிழ்நாடு, தெலங்கானாவில் NIA சோதனை! ஆவணங்களும் ரொக்கமும் பறிமுதல் என அறிவிப்பு!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தினர்.  இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும்…

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தினர். 

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் விவகாரத்தில் தொடர்புடைய விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. மொபைல் போன்கள் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரபிய மொழிகளில் பல்வேறு ஆவணங்களும், 60 லட்சம் இந்திய பணமும், 18,200 அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 22 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அதில் கோயம்புத்தூர், சென்னை மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது. பிற மாநிலங்களை பொறுத்தவரை ஹைதராபாத்திலும், தெலங்கானா மாநிலத்தில் சைபராபாத்திலும் சோதனை  நடைபெற்றது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு இளைஞர்களை சேர்த்து தீவிரவாத நெட்வொர்க்கை உருவாக்கி நாடு முழுவதும் அமைதியை குலைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரபிக் மொழி வகுப்புகளை நடத்தி தீவிரவாதத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் பணியில், மண்டல கல்வி மையம் உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.