காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக
நேஷனல் ஹெரால்ட் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நேஷனல் ஹெரால்ட் முறைகேடு தொடர்பான புகார் அளித்த பிரதான மனுதாரரான சுப்பிரமணியசாமி தரப்பில், ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரை தன் தரப்புக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான புகார் விவரங்களை அமலாக்க துறையினர் சுப்ரமணியசாமிக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க தயாராக உள்ளேன். அதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் தேவைப்படும். அதனால் வழக்கின் விசாரணையை இன்றே தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி. 5000 பக்கம் கொண்ட அறிக்கை உள்ளது. அதனை முழுமையாக படிக்க வேண்டும். அதனால் பலத்தின் விசாரணையை வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதி தற்போது முதல் கட்ட பாதங்களை இன்றே தொடங்கலாம் என தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் வாதிட அனுமதி அளித்தார்.







