வெளியானது பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது First look!

அட்டகத்தி தொடங்கி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சாதிய இறுக்கங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பல்வேறு தளங்களில் கதைக்களம் அமைத்து விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவரின் படைப்புகளுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர்கள் மட்டுமல்லாமல்…

அட்டகத்தி தொடங்கி தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சாதிய இறுக்கங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்து பல்வேறு தளங்களில் கதைக்களம் அமைத்து விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவரின் படைப்புகளுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர்கள் மட்டுமல்லாமல் மூத்த இயக்குநர்களுமே கூட சாதியத்திற்கு எதிரான கருத்துக்களைக்கொண்டு தங்களின் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இன்னும் பிரம்மாண்டமான வெற்றியையும் வசூலையும் இப்படம் வாரிக்குவித்திருக்கும் என்றே சினிமா விமர்சகர்களால் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பா.ரஞ்சித் சத்தமேயில்லாமல் தன்னுடைய அடுத்த படைப்பான ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தையும் எடுத்து முடித்தார். அட்டக்கத்தி படத்திலிருந்து பா.ரஞ்சித்தின் அனைத்து படத்திற்கு சந்தோஷ் நாராயணனே இசையமைத்து வந்த நிலையில் இப்படத்திற்கு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்திற்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார்.

https://twitter.com/tenmamakesmusic/status/1478620738592468993?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478620738592468993%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.moviecrow.com%2FNews%2F29791%2Fpa-ranjith-natchathiram-nagargirathu

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் first look poster-ஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரஞ்சித். வானம் விடுஞ்சிருச்சி பாடலில் வரும்.. ‘மச்ச கல்லு மூக்குத்தி…
மஞ்ச தண்ணி ஆரத்தி…
மச்சான் இப்ப மாப்புள…
பொண்ணு புளியந்தோப்புல…

எனும் வரிகளுக்கேற்ப மூக்குத்தி அணிந்த ஒரு பெண்ணின் கூந்தலில் பலரும் பின்னப்பட்டிருப்பது போல் அமைந்திருக்கிறந்து இந்த poster.

https://twitter.com/beemji/status/1544660146152181760

கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு அழகான காதல் விருந்து வைக்கும் என்று கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் vikram61 படத்தை இயக்கும் ரஞ்சித் அதனைத்தொடர்ந்து வேட்டுவம் படத்தையும் கையில் வைத்துள்ளார். இதன் பணிகள் முடிவடைந்த கையோடு கமலின் படத்தை இயக்குகிறார் ரஞ்சித்!

கூடிய விரைவில் இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு அழகான காதல் விருந்து வைக்கும் என்று கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் vikram61 படத்தை இயக்கும் ரஞ்சித் அதனைத்தொடர்ந்து வேட்டுவம் படத்தையும் கையில் வைத்துள்ளார். இதன் பணிகள் முடிவடைந்த கையோடு கமலின் படத்தை இயக்குகிறார் ரஞ்சித்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.