#NagaChaitanya – SobhitaDhulipala திருமணம் | கோலாகலமாக நடைபெற்ற சடங்குகள்!

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண சடங்குகள் இன்று கோலாகலமாக நடைபெற்றன. தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. 10 ஆண்டுகள் காதலுக்குப்…

Naga Chaitanya, Sobhita Dhulipala, wedding , beautiful ceremony,marriage

நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண சடங்குகள் இன்று கோலாகலமாக நடைபெற்றன.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. 10 ஆண்டுகள் காதலுக்குப் பிறகு 2017ம் ஆண்டு பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன 4 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பரஸ்பர விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு, தனது உடல்நிலை மற்றும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் சமந்தா அடுத்தடுத்த மிரள வைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இவரது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் எளிமையாக நடந்து முடிந்தது. நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவரின் திருமண தேதி விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள் : “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

இதையடுத்து, நிச்சயதார்த்திற்கு பிறகு முதல் முறையாக இன்று இருவரும் சேர்ந்த ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நாக சைதன்யா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில், தற்போது சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் தங்கள் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விசாகப்பட்டினத்தில் திருமணங்களின் முக்கிய நிகழ்வான சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், சோபிதா திருமணத்திற்கு முந்தைய விழாவின் படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.