குப்பை சுத்தம் செய்யும் போது மர்ம பொருள் வெடிப்பு : தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும்போது மர்மபொருள் வெடித்து தூய்மைப் பணியாளர் பலி…

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஷைகுடாவில் நேற்று மாலை குப்பைகளை சுத்தம் செய்யும் போது, ஏற்பட்ட மர்ம வெடிவிபத்தில் தூய்மை பணியாளர் எஸ். நாகராஜு (37) உயிரிழந்தார். அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்மாற்றி அருகே குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வெடித்ததில், வெடிப்பில் தாக்கத்தால் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அருகிலுள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

குப்பையில் அறியப்படாத ரசாயனங்கள் இருந்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.