மயோபதி மருத்துவமனை – 35 குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகளை வழங்கிய நடிகர் கார்த்தி!

ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மையோபதி மருத்துவமனையில் 35 குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகளை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி. தொடர்ச்சியாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி பல்வேறு சமூக…

ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மையோபதி மருத்துவமனையில் 35 குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகளை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கார்த்தி. தொடர்ச்சியாக வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். மேலும் விவசாயிகளுக்கும் உதவிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ஜீவன் அறக்கட்டளை நடத்தும் மையோபதி மருத்துவமனையின் குழந்தைகளின் அவசர தேவையை அறிந்து குழந்தைகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை நடிகர் கார்த்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். கொம்பன் திரைப்பட படப்பிடிப்பு சமயங்கள் மற்றும் பல முறை இந்த மருத்துவமனைக்கு நடிகர் கார்த்தி சென்று வந்துள்ளார்.

அப்படியாக மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவை என்ற தகவல் கிடைத்ததும், நடிகர் கார்த்தி குழந்தைகள் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 35 படுக்கைகளை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு மையோபதி மருத்துவமனையின் மருத்துவர் டேனியல் மற்றும் குழந்தைகள் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்தனர். இந்த மருத்துவமனை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.