இன்று நடைபெறும் எல்ஜிஎம் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா; ரசிகர்கள் உற்சாகம்!

‘எல்.ஜி.எம்’  படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. ‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும்…

‘எல்.ஜி.எம்’  படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்‌ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ராஞ்சியில் இருந்து விமானம் மூலம் தோனி சென்னை வந்தடைந்தார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.