ஆஷஸ் டெஸ்ட் தொடர்; 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், ஹெட்டிங்லி மைதானத்தில் 3வது போட்டி நடைபெற்றது. முதல்…

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், ஹெட்டிங்லி மைதானத்தில் 3வது போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களும், இங்கிலாந்து அணி 237 ரன்களும் எடுத்தன.

26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் ஹாரி ப்ரூக் 75 ரன்களும், ஸாக் கிராவ்லி 44 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் எடுத்த மார்க் வுட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆஷஸ் தொடரின் அடுத்தப் போட்டி வரும் 19-ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.