மும்பையில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே டார்டியோ பகுதியில் உள்ள 20 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை மாநகர மேயர் கிஷோரி, மீட்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுக்குமாடி கட்டத்தில் உள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீ விபத்தை ஆய்வு செய்த பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என தெரிவித்தார். இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்தாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவரணமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Advertisement: