நடப்பு ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத்தின் பந்துவீச்சை பீஸ் பீஸாக்கிய மும்பை 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து குஜராத் அணி 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், இருபது ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 50 பந்துகளில் 81ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் குவாலிஃபயர் 2 சுற்றுக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது. அதில் குவாலிஃபயர் 1 சுற்றில் தோல்வியை தழுவிய பஞ்சாபை எதிர்கொள்ளும். இதில் வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.







