முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு

உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்து வலியுறுத்தி, முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து, தமிழ்நாடு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். 4 மாத இடைவெளிக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையில் ஐவர்…

உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்து வலியுறுத்தி, முல்லைப் பெரியாறு அணையின் துணைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து, தமிழ்நாடு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

4 மாத இடைவெளிக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளரும், மத்திய கண்காணிப்பு துணைக்குழு தலைவருமான சரவணக்குமார் தலைமையில், தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாமி இருவின் உதவி பொறியாளர் குமார் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிகுமார் மற்றும் பிரசித்.ஆகியோர் பங்கேற்றனர்.

முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மற்றும் சுரங்க பகுதிகளிலும் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து இடுக்கி மாவட்டம் குமுளியில் நடந்த முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும், அணைப் பகுதிக்குள் தளவாட பொருட்களை கொண்டு செல்ல தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையும் கேரள நீர்ப்பாசனத்துறையும் தடுப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.