தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று 2வது டி20

இந்தியா-இலங்கை இடையிலான 2வது டி-20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20…

இந்தியா-இலங்கை இடையிலான 2வது டி-20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இப்போட்டியில், காயம் காரணமாக இலங்கை அணியின் மெண்டிஸ், தீக்சனா ஆகியோர் விலகியுள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வரும் ஹசராங்காவும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் சரிவில் இருந்து மீள்வதற்கு முடிந்தவரை கடுமையாக முயற்சிப்பார்கள்.

அதே நேரத்தில், குளிர்ச்சியான பகுதியான தரம்சாலாவில் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபடலாம். ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.