சாலை விபத்து: மூவர் பலி

எட்டையபுரம் அருகே அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய் மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் மணிகண்ட…

எட்டையபுரம் அருகே அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் தாய் மகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் மணிகண்ட ராஜா என்பவர் மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மூவரும் சோழபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது அவ்வழியாக சென்ற சரக்கு லாரி, இவர்களின் 2 சக்கர வாகனத்தின் மீது மோதியது. நிலை தடுமாறியதில் 3 பேரும் கீழே விழுந்தனர்.

மோதிய வேகத்தில் சரக்கு வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி 2 பெண்களும், சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மணிகண்டராஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த 3 பேரும் உறவினர்கள் என்பதும், காரைக்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் அவரது மகள் கன்னிசெல்வி மற்றும் மாரியம்மாளின் அக்கா கணவர், மணிகண்டராஜா என்பதும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.