புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10 ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேத்தின் நிறைவு நாள் சிறப்பு பூஜையுடன் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் விழாவிற்கு குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், தாரை தப்பட்டை முழங்க ஆண்களும், பெண்களும் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டலாபிஷேகம் நிறைவு விழாவில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.