ஓட்டுக்காக நாடகம் ஆடுவது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தி கிராமம், ஜே. ஜே. நகர், சிவாஜி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதைத் தொடர்ந்து பேசிய விஜய பாஸ்கர், காந்திகிராமம் பகுதியில், எதிர்ப்பை மீறி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டி வரலாறு படைக்கப்பட்டதாகவும் கொரோனா காலத்தில் இந்த மருத்துவமனை உதவிகரமாக இருந்ததாகவும் கூறினார். ஓட்டுக்காக நாடகம் ஆடுவது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது எனவும் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.