சமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி

சமோசா விலையை ஏற்றியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் நகரில் அமர்கன்டக் என்ற பகுதியில் கடை நடத்தி வருபவர் கஞ்சன் சாஹு.…

சமோசா விலையை ஏற்றியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் நகரில் அமர்கன்டக் என்ற பகுதியில் கடை நடத்தி வருபவர் கஞ்சன் சாஹு. இதே பகுதியை சேர்ந்த பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர், கடந்த 22 ஆம் தேதி தனது நண்பர்கள் இருவருடன் இவர் கடையில் சமோசா வாங்கியுள்ளார். வழக்கமாக 2 சமோசாவை 15 ரூபாய்க்கு விற்கும் கஞ்சன் சாஹு, இப்போது ரூ.20 ஆக ஏற்றியுள்ளார்.

இதனால் கடுப்பான ஜெய்ஸ்வால் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்கு வாதம் கொஞ்சம் ஓவரானதால், கடைக்காரர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெய்ஸ்வாலிடம் ’என்னங்க நடந்தது?’ என்று விசாரித்தனர்,

இதையடுத்து மறுநாள் அந்தக் கடைக்கு சென்ற ஜெய்ஸ்வால், சாஹூவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர் மீது பற்றிய தீயை, அணைத்தனர்.

காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்ஸ்வால் உயிரிழந்தார். போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால் தான் அவர் உயிரிழப்பு  கொண்டதாக ஜெய்ஸ்வால் உறவினர்கள் தெரிவித்துள் ளனர்.சமோசா விலை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தி ருப்பது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.