புதுக்கோட்டை மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்த ஆணையிட்டது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி, சந்தைப்பேட்டை, போஸ்நகர், மாலையீடு, மச்சுவாடி, சாந்தநாதபுரம், பிள்ளை தண்ணீர் பந்தல், சமத்துவபுரம், தைலாநகர், அசோக்நகர், அன்னச்சத்திரம்
ஆகிய 11 பள்ளிகளில் இத் திட்டம் செயல் படுத்த பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திட்டத்தின் கீழ் நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1 முதல்
காலை சிற்றுண்டி வழங்க உத்தரவிட்டது அடிப்படையில் புதுக்கோட்டை
நகராட்சிக்கு உட்பட்ட 11 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் 1 ஆம்
தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கிட நடவடிக்கை எடுக்க பட்டது.
சாந்தனபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவினர் தொடங்கி வைத்தனர்.
சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய காலை சிற்றுண்டி உணவை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.
ம. ஸ்ரீ மரகதம்