வள்ளியூரில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம் – விவசாயிகள் வேதனை

நெல்லை மாவட்டம். வள்ளியூர் பகுதிகளில் சூறைக்காற்றால் 5,000-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கனமழையுடன்…

நெல்லை மாவட்டம். வள்ளியூர் பகுதிகளில் சூறைக்காற்றால்
5,000-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியது.

இதனால் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில், குலை தள்ளிய நிலையில் அறுவடை செய்ய தயாராக இருந்த ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. அரசு சார்பில், சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க , நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.