முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

பூமியிலிருந்து விலகி செல்லும் நிலவு; விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்

புதிய கண்டுபிடிப்பு ஒன்றில், சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக விலகிச் செல்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியைச் சுற்றி வரும் ஒரே கோள் சந்திரன் மட்டுமே. முன்னதாக, ஈர்ப்பு விசையின் காரணமாகச் சந்திரன் பூமியிலிருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது, ஆனால் புதிய கண்டுபிடிப்பு சந்திரனைப் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக வருடத்திற்கு 3.8 செமீ தொலைவில் நகர்கிறது என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இணையதளம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக, பண்டைய மனித நாகரிகங்களால் காலெண்டராக பயன்படுத்தப்பட்டதால், சந்திரன் நேரத்தை அளவிடுவதில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இருப்பினும், சமீபத்திய கண்டுபிடிப்பு, கடந்தகால கண்டுபிடிப்புகள் பற்றி நிறைய கேள்விகளைக் கொண்டு வந்துள்ளது என்று indy100 இணையதளம் தெரிவித்துள்ளது.

சந்திரன் ஏன் பூமியிலிருந்து விலகிச் செல்கிறது?

“மிலன்கோவிச் சுழற்சிகள்” சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்வதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதன் காலநிலையைப் பாதிக்கிறது.

இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தையும் தீர்மானிக்கின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதமாற்றம் செய்வதற்கு வெளிநாட்டு நிதி: அமலாக்கப்பிரிவு தகவல்

Halley Karthik

கிளிமஞ்சாரோ மலையில் பிரபல நடிகை

Halley Karthik

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்; வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு

G SaravanaKumar