மும்பையில் மின்தடை காரணமாக நடுவழியில் நின்ற மோனோ ரயில் – மீட்பு பணிகள் தீவிரம்!

மும்பை கனமழை காரணமாக ஏற்பட்ட மின் தடையால் மோனோரயில் ஒன்று நடுவழியில் நின்றுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தொடர் கனமழை பெய்துவருகிறது. மாநில தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளான் போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த கனமழை காரணமாக மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும்  பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன்.

மேலும் மோசமான வானிலை  காரணமாக  மும்பைக்கு வரவேண்டிய  5 விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மும்பையில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் சில தனியார் அலுவலகங்கங்கள் விடுமுறை  அரிவித்துள்ளன. மேலும்  தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. பொது மக்கள் தேவையற்ற் பயணங்கலை தவிர்க்கவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மும்பை மைசூரு காலனி  பகுதி அருகே சென்று கொண்டிருந்த மோனோரயில் ஒன்று மின் தடை காரணமாக திடீரென நின்றது. இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து,  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர்  பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.