பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் – வீடியோ வைரல்!

2 குரங்குகள் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ராஜஸ்தானின் அஜ்மர் நகரில் பெண் ஒருவர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து காய்கறியை நறுக்கி கொண்டு கொண்டிருந்தார்.  அப்போது அவர்…

2 குரங்குகள் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தானின் அஜ்மர் நகரில் பெண் ஒருவர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து காய்கறியை நறுக்கி கொண்டு கொண்டிருந்தார்.  அப்போது அவர் பின்னர் உள்ள சுவற்றின் மீது வந்த குரங்கு ஒன்று அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தது.

அடுத்து வந்த மற்றொரு குரங்கும் அவரின் தலைமுடியை பிடித்து இழுந்தது.  அந்த பெண் அதிலிருந்து மீள முயன்றார்  ஆனால் அவரால் முடியவில்லை.  தொடர்ந்து அவர் கத்தி கூச்சலிட்டார்.  இதனைக் கேட்ட நபர் ஒருவர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்ததும் அந்த குரங்குகள் அங்கிருந்து ஓடின.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ @beawar_live_news என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. அதில் ​​”அஜ்மீரில் குரங்குகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  அவை மக்களை தாக்குவதுடன் பொருட்களை உடைக்கிறது.  குரங்குகள் ஒரு பெண்ணைத் தாக்கி அவரது முடியை பிடித்து இழுத்தன.  அந்தப் பெண் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார்.  குரங்குகள் அவரின் பின்னால் இருந்து தாக்கின” என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.