‘குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, அவர் முன்னிலையில் இரண்டு…

குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, அவர் முன்னிலையில் இரண்டு தலைமைச் செயலக அலுவலர்களுக்குச் செவிலியர்கள் தடுப்பூசியைச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தடுப்பூசி போடும் பணி தமிழ்நாட்டில் இயக்கமாகவே நடைபெற்று வருவதாகவும், வரும் 7 ஆம் தேதி அடுத்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநகராட்சி செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், 40லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்தி உள்ளதாகக் கூறினார். மேலும், கன்னியாகுமரியில் குரங்கு அம்மை பாதிப்பு கிடையாது அதனை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்த அவர், வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும், குரங்கு அம்மை இதுவரை தமிழ்நாட்டிற்கு வரவில்லை எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘மீண்டும் தர்மம் வெல்லும்’ பிரதமரை வழியனுப்பிய பிறகு ஓபிஎஸ் பேட்டி’

மேலும், உக்ரைன் மாணவர்கள் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்ற உத்தரவிற்காக நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், முன்பு வெளிநாட்டிலிருந்து இங்கு மருத்துவப் பயிற்சி பயில்வதற்கு சுமார் 5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்பொழுது மாணவர்களின் சுமை கருதி வெளிநாட்டிலிருந்து இங்கு மருத்துவம் பயில வரும் மாணவர்கள் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.