முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சாதி மற்றும் பெண்ணடிமை ஒழிப்பே பெரியாரின் இலக்கு. சமூக நீதி கதவை திறந்தது பெரியாரின் கைத்தடி எனக்கூறிய அவர், இந்தியா முழுவதும் சமூகநீதி நிலவிட காரணம் பெரியாரின் அடித்தளம் தான் என தெரிவித்தார். அவரின் செயல்கள், போராட்டங்கள் குறித்து பேச வேண்டுமானால் அவையை ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக, பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சமூக நீதி பா.ஜ.கவின் கொள்கைகளில் ஒன்று என கூறினார். பெரியாரின் கொள்கையும் சமூக நீதி தான். அதனால், கடவுள் நம்பிக்கையுடன் முதலமைச்சரின் அறிவிப்பை பாஜக வரவேற்பதாகவும் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Saravana Kumar

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு!

Halley karthi

வெப்சீரிஸ் படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்

Gayathri Venkatesan