சொன்னதை செய்த அமைச்சர்… பாஜக தோல்வியால் ராஜிநாமா!

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில், 4ல் பாஜக தோல்வியுற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிரோடி லால் மீனா. ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்…

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில், 4ல் பாஜக தோல்வியுற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிரோடி லால் மீனா.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிரோடி லால் மீனா.  இவர் அந்த மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வந்தார்.  72 வயதான இவர் இரண்டு முறை எம்.பி.யாகவும், 5 முறை  எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.  இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால்,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து கிரோடி லால் மீனா கூறுகையில் “பிரதமர் மோடி என்னிடம் 7 தொகுதிகளை கொடுத்தார். நான் கடுமையாக பணியாற்றினேன். கட்சி 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும் கூட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதியில் பாஜக 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

கிரோடி லால் மீனா பிரச்சாரம் செய்த 7 தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.  இந்த நிலையில் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.