அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை கொடுத்த ஆயி அம்மாளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரையை சேர்ந்த ஆயி அம்மாளை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.   உலகப் புகழ்பெற்ற  மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி…

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்த மதுரையை சேர்ந்த ஆயி அம்மாளை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.  

உலகப் புகழ்பெற்ற  மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை  தொடங்கியது.  இந்த விழாவை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது. கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.

இப்போட்டியில் விளையாட 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.  வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசும், இரண்டாம் வீரருக்கும், காளைக்கும் பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில்,  7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது 1.50 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நினைவாக அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய ஆயி (எ) பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.  அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.