அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசை குறைகூறும் முன்பு, சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மையினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மத்திய அரசை குறை கூறும் முன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார். பாஜக எப்போதும் தமிழ்நாட்டின் படிக்கல்லாகத்தான் இருக்கிறது என்றும் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.








