முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!

அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் நேற்று முன்தினம் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.…

அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்து பேசினார்,

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சைதாப்பேட்டை வீட்டில் நேற்று முன்தினம் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதமசிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக பொன்முடியும் அவர்து மகனும் ஆஜராகினர். இதேபோல் நேற்றும் அமலாக்கத்துறை அலவலகத்தில் பொன்முடியும் அவரது மகனும், ஆஜராகினர். மாலை 4 மணிக்கு தொடங்கிய விசாரணை 6 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.  இதனை அடுத்து பொன்முடியும் அவரது மகன் கௌதமசிகாமணியும் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர் முதலமைச்சரிடம் விவரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.