தமிழகம்

அதிமுக கொடி விவகாரம்; அமைச்சர்கள் மீண்டும் புகார்

அதிமுக கொடி, பெயரை பயன்படுத்தி, தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சசிகலா, டிடிவி.தினகரன் சதித் திட்டம் தீட்டுவதாக அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வந்த வி.கே.சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனால், மருத்துவமனையில் இருந்தே சசிகலா விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வரும்போது அதிமுக கொடிபொருத்தப்பட்ட காரை பயன்படுத்தினார்.

அதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில், சசிகலா, டிடிவி.தினகரன் மீது இன்று மீண்டும் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அமமுகவினர் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்துக்கு வருவோம் என கூறுகின்றனர். மேலும், தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க சசிகலா ஆதரவாளர்கள் முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

கலாம் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த சென்னை மாணவி

Saravana Kumar

புதிய பாடப்புத்தக விநியோகம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

Ezhilarasan

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்த சிறப்பம்சங்களை பார்க்கலாம்!

Gayathri Venkatesan

Leave a Reply