விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் #AnbilMahesh பதில்!

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர்…

Minister #AnbilMahesh responds to Vijay Sethupathi's request!

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (டிச.30) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் நல்லகண்ணு குறித்த ‘நூறு கவிஞர்கள் – நூறு கவிதைகள்’ என்ற கவிதை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய விஜய் சேதுபதி, விடுதலை போராட்ட வீரர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

“விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்”

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.