மியாமி காவல்துறை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று மக்களிடையே ஆச்சரியத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு நகரம் மியாமி. இந்த மியாமியின் காவல்துறையை மேம்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மியாமி காவல்துறைக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர்களின் காவல் வாகனமாக கொடுத்துள்ளது.
MBPD and professional staff exemplify the highest standards of dedication and quality policing in our unparalleled commitment to the residents and visitors we serve. We are thrilled to introduce this stunning addition to the MBPD recruitment team—courtesy of @bramanmotors ! pic.twitter.com/I27NUAgsge
— Miami Beach Police (@MiamiBeachPD) May 9, 2024
இந்த வீடியோவை மியாமி காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இது பகிரப்பட்டதிலிருந்து பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. பலர் மக்களின் பணத்தை அரசு இது போன்று வீண் செலவு செய்கிறது என தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு பார்ப்போம்.
- பார்க்கிங் டிக்கெட்டில் நாங்கள் செலுத்தும் பணத்தை வைத்து இதைத்தான் செய்கிறீர்கள்.
- என்னால் இதை நம்பவே முடியவில்லை.
- அருமையான வேலை. இந்தமாதிரி செயல்கள்தான் நமது நகரத்தை வேறு இடத்திற்கு கொண்டுசெல்கின்றன. இதை நினைத்து பெருமைப்படுகின்றன.
- பணத்தை செலவழிக்க வேறு வழி இல்லாததுபோல் இப்படி வீணடிக்கிறார்கள். இதற்கு பதில் சாலையோரங்களில் இருப்பவர்களுக்கு உதவலாம்.







