மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் துவங்கி, 150 ஆண்டுகள் ஆனதை அடுத்து, இன்றும் நாளையும் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 150 ஆண்டுகள் ஆகின்றது. இதனை சிறப்பிக்கும் விதமாக 150 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையம் முழுவதும் கண்ணைக் கவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாரத்தான் ஓட்டம், ரயில் நிலைய கண்காட்சி திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.







